பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டில் நுழைந்த கயல் ஆனந்தி? - லொஸ்லியவை ஓரங்கட்டும் ரசிகர்கள்!

Last Updated: வியாழன், 25 ஜூலை 2019 (18:12 IST)
தமிழில் பிக்பாஸ் சீசன் 3 நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருவதோடு தொலைக்காட்சியின் டிஆர்பியும் கிடு கிடுவென அதிகரித்துவிட்டது. 


 
இந்நிகழ்ச்சியில் மொத்தம் 17 போட்டியாளர்கள் பங்குபெறுவார்கள் என கமல் முன்னரே அறிவித்திருந்தார். ஆனால் ஆரம்பத்தில் 15 போட்டியாளர்கள் மட்டும் வைத்து நிகழ்ச்சியை ஆரம்பித்தனர். பின்னர் 16-வது போட்டியாளராக மீரா மிதுன் நுழைந்தார். 
 
இதற்கிடையில் வனிதா மற்றும் மோகன் வைத்யா என இரண்டு போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு 2 வாரத்திற்கு மேலாகியும் வைல்ட் கார்டு மூலம் ஒருத்தரும் வரவில்லை இதனால் நிகழ்ச்சி சற்று சலிப்பு தட்ட ஆரம்பித்தது. 
 
பின்னர் புது புது டாஸ்க்களை கொடுத்து நிகழ்ச்சியை ஓரளவிற்கு சுவாரஸ்யமாக எடுத்து செல்கின்றனர். அந்தவகையில் தற்போது 17வது போட்டியாளராக ராஜா ராணி  சீரியல் நடிகை ஆலயா மானசா பங்கேற்பார் என பேச்சு அடிபட்டது. ஆனால் தற்போது பிரபல நடிகையான கயல் ஆனந்தி வைல்ட் கார்ட் மூலம் பிக்பாஸில் நுழையவுள்ளதாக சமீபத்திய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. 
 
தற்போது  இவருக்கு சொல்லிகொள்ளுமளவிற்கு பட வாய்ப்புகள் எது பெரிதாக இல்லாததால் பிக்பாஸில் நுழைய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் மட்டும் பிக்பாஸில் நுழைந்து விட்டால் லொஸ்லியவை ரசிகர்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள் எனவும் நெட்டிசன்ஸ் கூறிவருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :