1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 1 டிசம்பர் 2021 (15:08 IST)

கொரோனாவில் இருந்து குணமாகிய கமல்ஹாசன்: டிஸ்சார்ஜ் எப்போது?

நடிகர் கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிலிருந்து குணமாகி விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது 
 
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 22ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்ததன் பயனாக தற்போது அவர் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டார்
 
இருப்பினும் அவர் டிசம்பர் 3ஆம் தேதி வரை தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி முதல் கமல்ஹாசன் தன்னுடைய வழக்கமான பணிகளை தொடரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து இந்த வாரம் சனி ஞாயிறு கிழமைகளில் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்