புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 7 பிப்ரவரி 2019 (16:14 IST)

சரத்குமாரை கேவலமாக கலாய்த்த நெட்டிசன்ஸ்! கொதித்தெழுந்த மகள்..!

நடிகர் சரத்குமாரை கேவலமாக கலாய்த்த நெட்டிசன் ஒருவரை சரத்குமாரின் மகள் ரயன் மிதுன் தக்க பதிலடி கொடுத்துள்ளார். 


 
நடிகை ராதிகா தனது கணவர் சரத்குமார், மகள் ரயன் மிதுன், பேரனுடன் இருக்கும் புகைப்படத்தை ராதிகாவின் மகள் ரயன் மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் அதனை பார்த்த ஒருவர் அசிங்கமாக கலாய்த்தார். இதை பார்த்த ரயன் உடனடியாக அந்த நபருக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதத்தில் ரீட்விட் செய்துள்ளார் .
 
அதாவது, சரத்குமார் தனது இரண்டாவது பொண்டாட்டியான ராதிகாவின் முதல் புருஷன் பொண்ணோட பையனுடன் இருக்கிறார், ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று சரத்குமாரை கேவலமாக கலாய்த்தவரை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கியுள்ளார் மகள் ரயன்.
 
கொத்தெழுந்து ரீட்விட் செய்த ரயன், ஒரு குழந்தையுடன் கணவரை பிரிந்து வருவதற்கு  தனி தைரியம் வேண்டும். அப்படி வந்து சொந்தமாக ஒரு தொழிலை துவங்கி அதை வெற்றிகரமாக நடத்துவது சுலபமான காரியம் இல்லை என தன் அம்மா ராதிகா பட்ட கஷ்டங்களை விவரித்துள்ளார் .


 
மேலும் அப்பா சரத்குமார் தன்னை ஒரு நாளும் வேற்று மகளாக நினைத்தது இல்லை, தன் சொந்த மகளாகவே பாசம் காட்டுவதாகவும், அதற்கும் ஒரு மனம் வேண்டும் என்று ரயன் தன் அப்பா சரத்குமார் தன் மீது வைத்திருக்கும் பாசத்தையும் விவரித்துள்ளார். மேலும் கூறிய அவர் என் தந்தை ஆசிர்வதிக்கப்பட்டவர் தான். அவருக்கு அருமையான மனைவி, 4 பிள்ளைகள், ஒரு பேரன், அவர் மீது பாசம் வைத்திருக்கும் குடும்பம் உள்ளது என்று கூறி கலாய்த்த அந்த நபர் முகம் சுளிக்கும் வகையில் ட்விட்டியுள்ளார் ரயன் .