தாடி வைத்தவர் பிரதமர் ஆகும்போது தாடி வைத்த நான் முதல்வர் ஆகக்கூடாதா?

Last Modified வெள்ளி, 25 ஜனவரி 2019 (18:54 IST)
தாடி வைத்த மோடி பிரதமராக இருக்கும்போது அதே தாடி வைத்த நான் முதல்வர் ஆகக்கூடாதா? என நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் இன்று அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தூத்துகுடியில் இன்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மகளிர் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், 'ஒரு கட்சி என்றால் அந்த கட்சியின் தலைவன் முதல்வராக வேண்டும் என்பது அந்த கட்சியின் தொண்டர்கள் நினைப்பது வழக்கமே

இந்த 22 வருடங்களில் கூட்டணிக்காக உழைத்துவிட்டேன். ஆகவே இனிமேலாவது எங்களுக்காக எங்கள் கட்சிக்காக உழைக்க திட்டமிட்டுள்ளேன். எங்கள் கட்சிக்கு எத்தனை சதவீதம் ஓட்டு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளோம்.


மேலும் முதல்வர் ஆகும் எண்ணம் உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த சரத்குமார், 'தாடி வைத்த மோடி பிரதமர் ஆகியிருக்கும்போது அதே தாடி வைத்த நான் முதல்வர் ஆகக்கூடாதா? என்ற எதிர்க்கேள்வியை சரத்குமார் கேட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :