வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 27 ஜூலை 2023 (22:40 IST)

அமெரிக்க ரஜினி ரசிகர்கள் நடத்தும் பிரமாண்ட கிரிக்கெட் தொடர்

rajini-jailer
நடிகர் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர்.

இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படம்  பான் இந்தியா படமாக ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தில் முதல் சிங்கில் காவாலா, 2 வது சிலில் குஹூம், 3 வது சிங்கில் ஜுஜுபி நேற்று ரிலீஸானது.

இந்த நிலையில், இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்’ ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின்  சென்சார் மற்றும் ரன்னிங்  தகவல் வெளியானது.

அதன்படி, இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளதாகவும், அதாவது இந்த படம் 2 மணி நேரம் 48 நிமிடங்கள் என்றும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இந்த படம் சுமார் 3 மணி நேரம் ஓடும் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், ஜெயிலர் படம் அடுத்தமாதம் வெளியாகவுள்ள  நிலையில்,  அமெரிக்காவில் டெலாவர் மகாணத்தில் ரஜினி ரசிகர்கள் பிரமாண்ட கிரிக்கெட் தொடர் நடத்தவுள்ளனர்,.

வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை இத்தொடர் நடக்கவுள்ளது இதற்கு ஜெயிலர் கிரிக்கெட் கப்(jeyiler cricket cup)  என்று பெயரிட்டுள்ளனர்.