கன்னட சினிமா சூப்பர் ஸ்டாரின் மனைவி காங்கிரஸில் இணைந்தார்!
கர்நாடக சட்டசபைத் தேர்தல் அடுத்தமாதம் நடக்கவுள்ள நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் மனைவி காங்கிரஸில் இணைந்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே மாதம் 13 ஆம் தேதி எண்ணப்பட்டும் முடிவுகள் அன்றைய தினம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
எனவே, இத்தேர்தலில் ஜெயிக்க வேண்டுமென பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில், அமித்ஷா, இம்மாநிலத்திற்கு வந்து, அம்மாநில முதல்வர் பசுவராஜ் பொம்மை போட்டியிடும் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த நிலையில், சினிமா நட்சத்திரங்களும் தங்கள் கட்சிக்கு வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.
அதன்படி, கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் மதச்சார்பற்ற ஜனதா கட்சியில் இருந்த நிலையில், அக்கட்சியில் இருந்து விலகி இன்று காங்கிரஸில் இணைந்துள்ளார்.