விமானநிலையத்தில் பிரபாஸை கன்னத்தில் அறைந்த ரசிகை.! வைரலாகும் வீடியோ.!

Last Updated: செவ்வாய், 5 மார்ச் 2019 (15:46 IST)
உலக புகழ்பெற்ற பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் உலகளாவிய ரசிகர்களை பெற்றவர் நடிகர் பிரபாஸ்.  அந்த படத்தில் நடித்து மாபெரும் புழ்பெற்ற அவர் எங்கு சென்றாலும் ரசிகர்களின் அன்புத்தொல்லை இருக்கத்தான் செய்கிறது. 


 
பாகுபலி படத்தின் மூலம் ஏராளமான பெண் ரசிகர்களுக்கு பேஃரைட் ஹீரோவாக அமைந்த  பிரபாஸ் தமிழ், தெலுங்கு சினிமாக்களையும் தாண்டி ஹாலிவுட் வரை வெறித்தனமான ரசிகர்கள் இருப்பது கொஞ்சம் ஆச்சர்யப்படவேண்டிய விஷயம் தான்.
 
இந்நிலையில் தற்போது அதனை நிரூபிக்கும் விதமாக,  சமீபத்தில் நடிகர் பிரபாஸை விமான நிலையத்தில் பார்த்த ரசிகை ஒருவர் மிகுந்த உற்சாகமடைந்தார். பின்னர் ஓடி சென்று அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட அந்த ரசிகை பிரபாஸ் கன்னத்தில் செல்லமாக அறைந்து விட்டு ஓடிவிடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Her excitement at peaksஇதில் மேலும் படிக்கவும் :