புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 27 பிப்ரவரி 2019 (18:44 IST)

வேற வேலையை பாருங்க நண்பா! ரசிகர்களுக்கு அறிவுரை கூறிய தளபதி 63 பிரபலம்!

தளபதி விஜய் நடித்து மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த மெர்சல், சர்கார் போன்ற படங்களுக்கு தன் பாடல் வரிகள் மூலமாக உயிர் கொடுத்தவர் பாடலாசிரியர் விவேக். 


 
மெர்சல் படத்தில் இடப்பெற்ற ஆளப்போறன் தமிழன் பாடல் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்த விவேக் தொடர்ந்து அடுத்தடுத்து தன் தனித்துவ திறமைகளை வெளிப்படுத்தி  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார் . இவர் எப்போதும் ட்விட்டரில் ஆக்டீவாக இருப்பதோடு ரசிகர்களுக்கு அடிக்கடி  அப்டேட்ஸ்  கொடுத்து குஷி படுத்துவார்.
 
இருந்தாலும் அப்டேட்ஸ் கொடுங்க... அப்டேட்ஸ் கொடுங்க   என்று இவரை விடாமல் துரத்துகின்றனர் விஜய் ரசிகர்கள் காரணம் தளபதி 63 படத்திற்கும் இவர் தான் பாடலாசிரியர் .
 
ஆதலால் நேற்று ரசிகர்கள் இவரது பிறந்தநாளுக்க்கு இன்னும்  50 நாட்கள் இருப்பதை அடுத்து #50DaysToGoForLyricistVivekAnnaBday என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.இதை பார்த்த விவேக் இந்த மாதிரி வேலைகளை விட்டுவிட்டு உங்கள் நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்துங்கள் நண்பா என செல்லமாக என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
 
தங்களுக்கு பிடித்த நடிகர்களை தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்களை கண்டுகொள்ளாத பல பிரபலங்களுக்கு மத்தியில் பாடலாசிரியர் விவேக்கின் இந்த அக்கறை நிறைந்த உள்ளதை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.