வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 9 ஜனவரி 2020 (21:36 IST)

முத்தம் கொடுத்த ரசிகரை கண்டுகொள்ளாமல் சென்ற பிரபல நடிகர்!

பிரபல நடிகை ஒருவர் ஜிம்மில் இருந்து வெளியே வந்தபோது அவருடைய கையைப் பிடித்து ரசிகர் ஒருவர் முத்தம் கொடுத்த போது அதனை கண்டுகொள்ளாமல் புன்சிரிப்புடன் அந்த நடிகை நடந்து சென்றது அனைவரையும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலிகானின் மகள் சாரா அலிகான். இவர் ஏற்கனவே இரண்டு பாலிவுட் படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இருப்பினும் இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இன்று காலை  சாரா அலிகான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துவிட்டு வெளியே வந்தபோது அவருடன் செல்பி எடுக்க சில ரசிகர்கள் அனுமதி கேட்டனர். அதனை அடுத்து அவர் ரசிகர்களுக்கு புன்சிரிப்புடன் செல்பிக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ரசிகர் திடீரென  சாரா அலிகான் கையை பிடித்து முத்தம் கொடுத்தார். இதனை பார்த்த அவருடைய பாதுகாவலர் ஒருவர் உடனடியாக அந்த ரசிகரை தள்ளிவிட்டார்
 
இருப்பினும் இந்த சம்பவத்தால் எந்தவித டென்ஷனும் அடையாத சாரா அலிகான் சாதாரணமாக அந்த ரசிகருக்கு ஒரு புன்சிரிப்பை மட்டும் உதிர்த்துவிட்டு நடந்து சென்றது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதே வேறு ஒரு நடிகையாக இருந்தால் கத்தி கூச்சல் போட்டு அந்த ரசிகரை உண்டு இல்லை என்று செய்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது