செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 9 ஜனவரி 2020 (15:52 IST)

என் புருஷன் இப்படி தான் இருக்கனும் - கண்டீஷன் போட்ட யாஷிகாவை கண்டந்துண்டமாக்கிய ரசிகர்கள்!

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார். மேலும் அடிக்கடி ஆன் நண்பர்களுடன் சேர்ந்து பப்பில் ஆட்டம் போடும் வீடியோக்களை பதிவேற்றம் செய்து ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொள்வார். 
 
இந்நிலையில் சமீபத்தில் தனக்கு வரப்போகும் கணவர் எப்படி இருக்கவேண்டும் என்று கூறிய யாஷிகா, நான் இப்போதைக்கு ஒரு ஹேப்பி சிங்கிள் கேர்ள், எனக்கு வரவிருக்கும் வருங்கால கணவர் ஜென்ட்டில்மேனாக இருக்க வேண்டும். அவர் என்னை நிறைய காதலிக்க வேண்டும்.  நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் அதே நேரத்தில்  ஜாலியான ரொமான்டிக் நபராகவும் இருக்கவேண்டும். கூடவே சாகச விரும்பியாகவும், கொஞ்சம் திமிர் பிடித்தவராகவும் இருக்க வேண்டும். அத்துடன் அவருக்கு பாடவும், நடனமாடவும், சமைக்கவும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். இது எல்லாத்தையும் விட மிக முக்கியமாக.... தாடி வைத்திருக்க வேண்டும் என கண்டீஷன்களை அடுக்கிக்கொண்டே போனார் யாஷிகா. 
 
இதற்கு அவரது ரசிகர்கள் செம்ம கடுப்பாகி....இதெல்லாம் சரி, நீங்க பாய் பெஸ்டின்னு சொல்லி ஒரு ஆண் நண்பருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்தீங்களே அவர் என்ன ஆனார். அப்போ சைடுல ஒன்னு ....கூட ஒண்ணா மேடம்...? என ஆளாளுக்கு கேள்வி கேட்டு வருகின்றனர்.