வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (21:25 IST)

பிரபல இசையமைப்பாளாருக்கு அமெரிக்க பெண் அதிகாரியுடன் விரைவில் திருமணம்!

siddhu kumar -raji
இசையமைப்பாளர் சித்து குமாருக்கும் அமெரிக்காவில் மனிதவள மேம்பாட்டு  அதிகாரியாகப் பணியாற்றும் ராஜி என்ற  பெண்ணுக்கும்  பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஒருவர் சித்து குமார். இவர் பிரபல இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான சிவப்பு மஞ்சல் பஞ்சை என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார்.

இப்படத்தை அடுத்து, ஜிவி.பிரகாஷ்  நடிப்பில் வெளியான பேச்சுலர் என்ற படத்திற்கும் இசையமைத்திருந்தார். இது ரசிககர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

தற்போது, கண்ணை நம்பாதே, நூறுகோடி வானவில் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார், இந்த நிலையில்,  சித்து குமாருக்கும் அமெரிக்காவில் மனிதவள மேம்பாட்டு  அதிகாரியாகப் பணியாற்றும் ராஜி என்ற  பெண்ணுக்கும்  பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி இவர்களின் திருமணம் மதுரையில் நடக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.