இனி PhD படிக்க முதுநிலை கல்வி கட்டாயமில்லை: அதிரடி அறிவிப்பு விடுத்த யுஜிசி
இவரை PhD என்ற ஆராய்ச்சி படிப்பு படிக்க முதுநிலை படிப்பு அவசியம் என்ற நிலையில் தற்போது இளநிலை படித்திருந்தால் போதும் என்று யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது
நான்கு வருட இளநிலை கல்வி படித்து, 10-க்கு குறைந்தபட்சம் 7.5 சிஜிபிஏ வைத்திருக்கும் மாணவர்கள் நேரடியாக யுஜிசி படிப்பு படிக்கலாம் என்றும், சி.ஜி.பி.ஏ. 7.5 க்கு குறைவாக இருப்பவர்கள், ஒரு வருடமாவது முதுநிலை படிப்பு படித்திருக்க வேண்டும் என்றும் யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு PhD படிப்புக்கான ஆய்வுசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 4 வருட இளநிலை படிப்பை கற்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியுள்ளார்.