செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 30 மார்ச் 2019 (15:37 IST)

சூப்பர் டீலக்ஸ்.... விஜய்சேதுபதி ரோலை நிராகரித்த பிரபல நடிகர்!!! லீக்கான தகவல்!!

சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய்சேதுபதி கேரக்டரில் நடிகர் சிவகார்த்திகேயனிடம் முதலில் படக்குழு பேசி, பின்னர் அதனை சிவகார்த்திகேயன் நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆரண்ய காண்டம் படத்தின் இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவின்  சூப்பர் டீலக்ஸ் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் விஜய்சேதுபதி முகச்சிறப்பாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த நடிகர். திருநங்கைகள் படும் அவலத்தை விஜய்சேதுபதி கண்முன் நிறுத்தியுள்ளார் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்த கேரக்டரில் நடிக்க சிவகார்த்திகேயனிடம் தான் படக்குழு முதலில் அணுகியிருக்கிறார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர்தான் இந்த கேரக்டருக்கு விஜய்சேதுபதி ஒப்பந்தமானார். சிவகார்த்திகேயன் ஒரு நல்ல சான்சை மிஸ் பண்ணிட்டார் என அவரின் ரசிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.