திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Modified: சனி, 30 மார்ச் 2019 (12:18 IST)

தவழ்ந்து தவழ்ந்து ஆட்சியை பிடித்தவர் எடப்பாடியார்... பிரபல நடிகர் விளாசல்!!!

சசிகலா காலில் தவிழ்ந்து முதல்வர் பதவியை பிடித்தவர் தான் எடப்பாடி பழனிசாமி என உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
 
நடிகரும் திமுக தலைவரின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் சமீபகாலமாக திமுக நடத்தும் கண்டன பொதுக்கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள் ஆகியவற்றில் கலந்துக்கொண்டு வருகிறார். சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின்  நேரடி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரை மூன்றாம் கலைஞர் என்றெல்லாம் திமுகவினர் சிலர் கூவி வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை தொகுதி, தி.மு.க., வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் சசிகலா காலில்  10 மாத குழந்தை போல் தவழ்ந்து ஆட்சியை பிடித்தவர் எடப்பாடியார். ஜெயலலிதா இருக்கும் போது அடிமை திராவிட முன்னேற்ற கழகமாக இருந்த அதிமுக தற்போது அனாதை திராவிட முன்னேற்ற கழகமாக மாறியுள்ளது. மக்கள் அதிமுக - பாஜக கூட்டணிக்கு பாடம் புகட்ட வேண்டும் என அவர் பேசினார்.