திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 ஜனவரி 2019 (12:58 IST)

96 –ன் 96 ஆவது நாள் – இயக்குனர் மகிழ்ச்சி

சென்ற ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 96 திரைப்படத்தின் 96 ஆவது நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

சென்ற ஆண்டு வெளியான விஜய் சேதுபதியின் படங்களில் அதிக வரவேற்பைப் பெற்ற படமென்றால் அது 96 தான். ரிலிஸுக்கு முன்னர் பல சிக்கல்களைக் கடந்து திரையரங்குகளுக்கு வந்த 96 படம், ரிலிசுக்குப் பின் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றது.

காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட படமான 96 படம் வழக்கம்போல இளைஞர்களை மட்டும் கவராமல் கல்யாணம் ஆகி தனது மத்திய வயதுகளில் இருக்கும் 70ஸ் மற்றும் 80ஸ் கிட்ஸ்களையும் கவர்ந்ததால் தியேட்டர்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே இருக்க தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.

சென்னைப் போன்ற பெருநகரங்களில் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்த போதே சன் டிவியில் ஒளிப்பரப்பப்பட்டாலும் இந்த படம் தொடர்ந்து வெற்றிகரமாக தியேட்டர்களிலும் ஓடியது. சிறப்பாக ஓடிய இந்தப் படம் பல திரைகளில் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.

தற்போது பெருவாரியான திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டு விட்ட 96 படம் இன்று தனது 96 ஆவது நாளை கொண்டாடுகிறத்யு. இதை 96 படத்தின் இயக்குனர் பிரேம் குமார் தனது முகநூலில் 96 படத்தின் போஸ்டருடன் வெளியிட்டு இருக்கிறார்.