செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 4 ஜனவரி 2019 (21:12 IST)

விஜய் கூட நடிக்க ஆசை: பிரபல நடிகை பளிச்

இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராஷி கன்னா. தெலுங்கு நடிகையான இவரின் சமீபத்திய ஹிட் அடங்க மறு. 
 
தன்னை பற்றிய சில விஷயங்களை கூறியுள்ளார். அவை, நான்  தினமும் ஒன்றரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன். காரமான மசாலா சேர்ந்த உணவு வகைகள் பிடிக்காது. நிறைய சாப்பிட மாட்டேன். 
 
கறுப்பும் வெள்ளையும் எனக்கு பிடித்த நிறங்கள். யாருக்கும் தெரியாமல் கவிதை எழுதுவேன். அடிக்கடி இசை கேட்பேன். பைக், கார் எதுவானாலும் நீண்ட பயணம் செல்வது பிடிக்கும். 
 
இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி 2 பேர் கூடவும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. விக்ரம் வேதா பார்த்ததில் இருந்து விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசை.
 
அதேபோல் தெறி, மெர்சல் ரெண்டு படங்களும் பார்த்தேன். விஜய் -அட்லீ காம்பினே‌ஷனில் நடிக்க வேண்டும் என்பதும் ஆசை என்னுடைய ஆசை என தெரிவித்துள்ளார்.