திரிஷா இல்லான சமந்தா: இது புதுசு!

Last Updated: புதன், 2 ஜனவரி 2019 (20:01 IST)
2018 ஆம் ஆண்டு அனைவரின் காதல் கதைகளையும் பள்ளி நினைவுகளையும் கிளறிவிட்ட படம் 96. இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்திருந்தனர். பிரேம் குமார் இயக்கியிருந்தார். 
 
யாரும் எதிர்பாரா காதல் கதையாய் அமைந்திருந்த 96 பல தரப்பு மக்களையும் கவர்ந்தது. இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டு நாயகன், நாயகி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
 
96 படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளார் தயாரிப்பாளர் தில் ராஜு. தெலுங்கிலும் படத்தை பிரேம் குமாரே இயக்க உள்ளார். 
 
விஜய் சேதுபதி மற்றும் திரிஷா கதாபாத்திரங்களில் நடிக்க பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சர்வானந்த் - சமந்தா ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். சர்வானந்த் தமிழில் வெளியான எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தமிழில் வெளியான விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் சமந்தா நடித்திருந்தார். இப்போது 96 படத்தில் நடிக்கவுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :