வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 5 மார்ச் 2019 (14:35 IST)

கல்யாணத்துக்கு முன் உறவு வைத்துக்கொள்ளலாமா? பிரசாந்தை சீண்டி மொக்கை வாங்கிய 90ml இயக்குனர்.!

பெஃமினிசம் என்று கூறி பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் புகை பிடிப்பது, குடிப்பது, கஞ்சா அடிப்பது, மோசமான இரட்டை அர்த்தங்களை கொண்டு பேசுவது என அத்தனை வித்தைகளையும் 90ml படத்தில் இறக்கி தான் சம்பாதித்து வைத்திருந்த அத்தனை நற்பெயரையும் பாதாளத்திற்கு தள்ளிவிட்டார் நடிகை ஓவியா.


 
அனிதா உதீப் இயக்கத்தில் வெளிவந்த 90ml படத்திற்கு பல தரப்பிலிருந்தும் விமர்சனரீதியாக மோசமாக விமர்சிக்கப்பட்டுவருகிறது.  அந்த வகையில் சமீபத்தில் பிரபல யுடியூப் சேனல் விமர்சகரான பாண்டா பிரசாந்த் 90ml  படத்தை படுமோசமாக விமர்சித்திருந்தார். அவரின் அந்த விமர்சனத்திற்கு நெட்டிசன்கள் பலரும் வரவேற்பு தந்திருந்தனர்.
 
அந்த விமர்சனத்தை பார்த்த அனிதா உதீப் கொதித்தெழுந்து  ட்விட்டரில் பிரசாந்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதாவது, நீங்கள் விமர்சனத்திற்கு  பதிலாக எனக்கு தனிப்பட்ட முறையில் அறிவுரைகளை கூறி உள்ளீர்கள். எனவே ,நீங்களே சொல்லுங்கள் திருமணத்துக்கு முன்பாக நான் உடலுறவு வைத்துக் கொண்டால் சரியா ?தவறா ?.அதற்கு முன்பாக உங்களுக்கு நான் வெயிட்டான கவரை அனுப்புகிறேன்’ என்று டுவிட் செய்திருந்தார். 


 
இதற்கு பதிலடி கொடுத்து பிரசாந்த், நீங்கள் பல விமர்சனங்களை விலை கொடுத்து வாங்கி விட்டீர்கள் என்பது தெரியும். ஆனால், அனைத்தையும் உங்களால் வாங்க முடியாது. படத்தின் விநியோகிஸ்தர்கள் பெரிய தொகை கொடுத்து இந்த படத்தை வாங்கியுள்ளனர். என்னிடம் இங்கு நெஞ்சை நிமிர்த்தி பேசுவதற்கு பதிலாக அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள் என்று பதில் பதிலளித்தார். 
 
மீண்டும் இதற்கு பதிலளித்த அனிதா, நான் என்னுடைய நிர்வாகிகளிடம் கேட்கிறேன் எப்படி உங்களுக்கு மட்டும் பணம் வராமல் போச்சுன்னு.. ஒருவேளை உங்களை அவர்கள் ஒரு பொருட்டாக எண்ணியிருக்கமாட்டார்கள் என்றார் . 


 
இதற்கு பதிலடி கொடுத்த பிரசாந்த், நான் என் மக்களுக்காக திரைவிமர்சனம் செய்கிறேன், மற்றவருக்காக நாம் செய்யவில்லை. என்னுடைய விமர்சனத்தின் கீழ் உள்ள கமெண்ட்களை படியுங்கள் ஒருவேளை கீழ் தவறாக இருந்தால் என்னை அவர்கள் நிராகரித்திருப்பார்கள். மேலும், நீங்கள் கொடுப்பதாக சொன்ன அந்த பெரிய தொகையை என்னுடைய டிப்ஸாக நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று பதில் கொடுத்துள்ளார்.