வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 14 ஜனவரி 2021 (16:48 IST)

ஜல்லிக்கட்டு போட்டியில் 26 காளைகளை அடக்கிய வீரர்கள் !!

இன்று தமிழர் திருநாளாம் தை முதல் நாள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் பொங்கலை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில் 430 மாடு பிடிவீரர்களும், 840 காளைகளும் பங்கேற்க உள்ளனர். மேலும் சுற்றுக்கு 50 வீரர்கள் என களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இன்று உற்சாகமாக ஜல்லிக்கட்டு போட்டியில் வீர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். இதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதில்,8 சுற்றுகள் முடிவில் 520 காளைகள் பங்கேற்றன. 420 மாடு பிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.  சிறந்த காளையாக ஜி.ஆர் காத்திக் காளை தேர்ந்தெடுக்கப்பட்டது.

சிறந்த மாடு பிடி வீரர்களாக  திருநாவுக்கரசு மற்றும் விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் தலா 26 காளைகளைப் பிடித்த  திருநாவுக்கரசு மற்றும் விஜய் ஆகியோருக்கு தலா ஒரு  பைக் பரிசாக வழங்கப்பட்டது.

கடந்தாண்டும் விஜய் முதல் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.