1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 23 ஆகஸ்ட் 2023 (22:09 IST)

கமல்ஹாசன் பட நடிகை மறுமணமா ?அவரே அளித்த விளக்கம்

cinema
தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி  நடிகையாக இருந்தவர் சுகன்யா,. இவர் புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பின்னர். சின்ன கவுண்டர், இந்தியன், வால்டர் வெற்றிவேல், மகாநதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதரன் என்பவரை திருமணம் செய்த சுகன்யா, பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்தார்.

இந்த நிலையில், இவர் 2 வது திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது.

இதுபற்றி சுகன்யா கூறியதாவது: ''திருமணம் செய்த கணவருடன் சரியாகப் பொருந்தவில்லை எனில்  அதில் இருந்து வெளியேறுவது நல்லது. சமூகத்தை  எதிர்க்க துணிவு இருந்தால் நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெறலாம். எனக்கு இவ்வாறுதான் நடந்தது '' என்று கூறியுள்ளார்.

மேலும், '' நான் மறுமணம் செய்யப்போவதில்லை என்று கூறவில்லை, 2 மாதங்களில் நான் ஐம்பது வயதை எட்டிவிடுவேன், அதன் பின்னர் பிறக்கும் குழந்தை என்னை அம்மா என்றழைக்குமா? இல்லை பாட்டி என்றழைக்குமா? எனக் குழப்பமாக உள்ளது?  என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கும்  ''என்று கூறியுள்ளார்.