ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 8 ஏப்ரல் 2020 (10:25 IST)

தென் கொரியாவில் குணமான 51 பேருக்கு மீண்டும் கொரோனா! அதிர்ச்சித் தகவல்!

தென் கொரியாவில் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று குணமானவர்களுக்கு மீண்டும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் தென் கொரியாவும் ஒன்று. அங்குள்ள டாயிகு என்ற பகுதியில் பெரிய பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் அங்கு சிகிச்சையில் குணமாகியதாக வீட்டுக்கு அனுப்பப்பட்ட 51 பேருக்கு மீண்டும் கொரோனா இருப்பது அதிர்ச்சியளித்துள்ளது.

இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் இருவிதமான கருத்துகளை முன்வைத்துள்ளனர். இது சோதனைகளில் நடந்த தவறாக இருக்கலாம் அல்லது மனித உடலில் மனித உள்ள பல்லாயிரம் கோடி செல்களில் ஏதோ ஒரு செல்லில் கொரோனா வைரஸ் பிரிக்க முடியாத அளவிற்கு ஒட்டிக்கொண்டு இருந்து மீண்டும் வந்திருக்கலாம் எனக் கூறுகின்றனர்.