கொரோனா பரவ என்ன காரணம்? புளுகிய சதிகோட்பாட்டாளர்கள்- தூக்கியடித்த யூட்யூப்!

youtube
Prasanth Karthick| Last Modified புதன், 8 ஏப்ரல் 2020 (09:21 IST)
உலகமெங்கும் தீவிரமாக பரவியிருக்கும் கொரோனா வைரஸ் 5ஜி அலைக்கற்றையால் பரவியதாக பேசி வெளியான வீடியோக்களை நீக்கியுள்ளது யூட்யூப் நிறுவனம்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் எப்படி உருவானது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வரும் நிலையில், இதுகுறித்த சதிகோட்பாட்டாளர்களின் கற்பனைகள் வீடியோக்களாக யூட்யூபில் உலாவ தொடங்கியுள்ளன.

கொரோனா பரவ சீனாவின் பயோ ஆய்வகங்கள் காரணம் என ஏதேதோ பேசி வந்த சதிகோட்பாட்டாளர்கள் கடைசியாக பழியை 5ஜி மேல் போட்டுள்ளார்கள். சீனாவில் 5ஜி நெட்வொர்க் சேவை தொடங்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் 5ஜி அலைக்கற்றைகளால் கொரோனா பரவி விட்டதாகவும், இது இலுமினாட்டிகளின் சதி என்றும் அறிவியல்பூர்வமாக, ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படாத தகவல்களை வைத்து தங்கள் கற்பனைக்கு சதிகோட்பாட்டாளர்கள் பேசி வருகின்றனர்.

இந்த வீடியோக்கள் யூட்யூப் மூலமாக வேகமாக பரவி வந்த நிலையில் அந்த வீடியோக்களை நீக்கி அதிரடி முடிவெடுத்துள்ளது யூட்யூப். வீடியோ நீக்கப்பட்டதும் இல்லுமினாட்டிகள் சதி என மீண்டும் சதிகோட்பாட்டாளர்கள் அதற்கு ஒரு வீடியோவை தயார் செய்து சமூக வலைதளங்களில் பரப்புவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறும்போது ரேடியோ வரிசை அலைக்கற்றைகளில் ஒன்றுதான் 5ஜி அலைக்கற்றை. இதனால் மனித உடலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது என கூறியுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :