செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 12 ஏப்ரல் 2021 (21:47 IST)

சின்னத்தம்பி படத்திற்கு 30 வயது…நடிகை குஷ்பு டுவீட்

சின்னத்தம்பி  படத்திற் இன்றுடன் வயது 30 ஆகிறது என நடிகை குஷ்பு தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில், நடிகர் பிரபு, குஷ்பு இணைந்து நடித்த படம் சின்னத்தம்பி. இவர்களுடன் இணைந்து குஷ்பு,கவுண்டமணி, ராதாரவி, ஆகியோர் நடித்தனர்.

இப்படம் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது. இளையராஜா இசையில் அமைந்த அத்தனை பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. இந்நிலையில் இன்றுடன் இப்படம் வெளியாகி 30 வருடங்கள் ஆகிறது. இதுகுறித்து நடிகை குஷ்பு கூறியுள்ளதாவது: சின்னத்தம்பி படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிறது. இப்படத்தின் மூலம் சினிமாவின் போக்கை மாற்றினோம். இப்படத்தின் இயக்குநர் பி.வாசு. எனக்குப் பிடித்த பிரபு, தாயரிப்பாளர் பாலு ஆகியோருக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சமீபத்தில் காலாமானார் என்பது குறிப்பிடத்தக்கது.