செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 2 மே 2020 (09:39 IST)

மண்டையில் தபலா வாசிக்கும் நீலிமா ராணி - ட்ரண்டாகும் அசத்தல் டிக்டாக் வீடியோ!

தொலைக்காட்சி சீரியல்களில் மிகவும் பிரபலமான நடிகை நீலிமா ராணி. சீரியலில் வில்லி ரோலில் வெளுத்துவங்கும் சுவர் சினிமாவில் பல குணசித்திர வேடங்கள் ஏற்று நடித்துள்ளார். கமல் ஹாசன் நடித்திருந்த தேவர் மகன் படத்தில் நீலிமா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

'வாணி ராணி', 'தாமரை', 'தலையணை பூக்கள்' அரண்மனைகிளி' உள்ளிட்ட சீரியல்களில் நடித்து புகழ்பெற்றார். மேலும் பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். தனக்கு இருபது வயது இருக்கும் போதே இசைவாணன் என்பவரை  திருமணம் செய்துகொண்ட நீலிமாவிற்கு இசை என்ற மகள் இருக்கிறாள்.

இந்நிலையில் தற்போது #ChampiBeats எனப்படும் சேலஞ்சை ஏற்று ஆண் ஒருவருடன் செய்த டிக்டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார். மண்டையில் தபலா வசிப்பதுபோலவே உள்ள இந்த சேலஞ் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.