மே 17 வரை விமானப் போக்குவரத்து ரத்து – மத்திய அரசு
உலகெங்கும் கொரொனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நேற்று மத்திய அரசு மூன்றாம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தம் 37,336 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9951 பேர் குணமாகியுள்ளனர். 1218 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், வரும் மே 17 ஆம் தேதி வரை உள்நாட்டு வெளிநாட்டு விமான சேவை ரத்து தொடரும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த உத்தரவு வெளிநாட்டு சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.