ஷங்கரை மகிழ்வித்த ஏமி ஜாக்சன் - வைரல் வீடியோ

Last Modified செவ்வாய், 27 நவம்பர் 2018 (14:40 IST)
இயக்குனர் ஷங்கர் மகிழ்ச்சி அடையும்படி நடிகை  ஏமி ஜாக்சன் அற்புதமான காரியம் ஒன்றை செய்துள்ளார். 
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் நாளை மறுநாள் பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது. படம் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் ரிலீஸுக்கு முன்பே ரூ. 370 கோடி வசூல் செய்து அபார சாதனைகளை படைத்துள்ளது. 
 
2.0 படத்தின் ஹீரோயினான ஏமி ஜாக்சன் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி மற்றும் படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். படம் ரிலீஸாகும் நேரத்தில் இது போன்ற புகைப்படங்களை அவர் வெளியிடுவது ஷங்கருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டு வந்தது. 
இருந்தாலும் ஏமி தன் இஷ்டம் போன்று கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். 
 
ஆனால் இது போன்ற புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று ஷங்கர் கேட்டுக் கொண்டும் அவர் நிறுத்தவில்லையாம். இதனால் ஏமி மீது கோபத்தில் இருந்த ஷங்கர் மகிழ்ச்சி அடையும் வகையில் ஒரு காரியம் செய்துள்ளார் ஏமி ஜாக்சன். 
அதாவது, 2.0 படப்பிடிப்பை துவங்கும் முன்பு சில சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர்கள் சென்னைக்கு வந்தனர். இது எங்களின் முதல் பயிற்சியின் போது எடுக்கப்பட்டது என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஏமி. அந்த வீடியோ சுவாரஸ்யமாக உள்ளது என்றே கூற வேண்டும். 
 
நேற்று வரை வாங்க ரம்மி விளையாடலாம் AMY என்ற கோடை பயன்படுத்துங்கள் என்று கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருந்தார் ஏமி. இந்நிலையில் தான் அவர் 2.0 படம் குறித்த சுவாரஸ்ய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்ததுமட்டுமல்லாமல் இயக்குனர் ஷங்கரையும் இதன் மூலம் மகிழ்வித்திருக்கிறார் ஏமி ஜாக்சன்.


இதில் மேலும் படிக்கவும் :