திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள்? உறுதி செய்யப்பட்டவர்கள் இவர்கள் நால்வரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் இன்று மாலை 6 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியின் சூட்டிங் நேற்று நடைபெற்றதாக தகவல்கள் வெளிவந்தது 
இந்த படப்பிடிப்பிலிருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் ஒரு சிலர் குறித்த தகவலும் மொத்த போட்டியாளர்கள் எத்தனை பேர் என்ற தகவலும் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதுவரை நடந்து முடிந்துள்ள நான்கு சீசன்களில் முதல் நாளில் 15 அல்லது 16 போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப் படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று நடைபெறும் 5 வது சீசனில் மொத்தம் 18 பேர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
அவர்களில் அபிஷேக், ஜெர்மனியை சேர்ந்த பாடகர் மதுமிதா, தொலைக்காட்சி நடிகர் ராஜமோகன் மற்றும் கானா பாடகி இசைவாணி ஆகிய நால்வர் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மற்ற போட்டியாளர் யார் யார் என்பதை இன்னும் சில நிமிடங்களில் பார்ப்போம்