1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 1 அக்டோபர் 2021 (19:17 IST)

இது யாருடைய இந்தியா? கமல்ஹாசன் ஆவேச கேள்வி!

அதானியின் ஒரு நாள் வருமானம் ஆயிரம் கோடியை தாண்டியுள்ள நிலையில் நடுத்தர வர்க்கத்தினர் பலரும் வறுமைக்கோட்டுக்கு கீழ் சென்று கொண்டிருக்கிறார்கள் என்றும் இதனால் இது யாருடைய இந்தியா என்ற கேள்வி எழுந்து உள்ளதாகவும் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் 
 
உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் அதானியின் தினசரி வருமானம் ரூபாய் 1000 கோடி என்று கேள்வி பட்டதை அடுத்து ஆவேசமாகத் ஒன்றை பதிவு செய்துள்ளார் அந்த டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:
 
தனிநபர் வருவாய் பெருமளவு குறைந்திருக்கிறது. 32 மில்லியன் இந்தியர்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்து சரிந்து வறுமைக் கோட்டினை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள். பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது. அதானியின் ஒரு நாள் வருமானம் 1000 கோடியாக உயர்ந்துள்ளது. இது யாருடைய இந்தியா?
 
 சமீபத்தில் வெளியான தகவலில் அதானியின் தினசரி வருமானம் 1002 கோடி என்றும் அம்பானியை அடுத்து அவர் இரண்டாவது பெரும் பணக்காரராக இருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே