1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 1 அக்டோபர் 2021 (22:11 IST)

இது ஓவியவா? லாஸ்லியாவா? நம்ப முடியாத அளவிற்கு செம ஸ்லிம்மான லாஸ்!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா என்பதும் அவர் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. 
 
ஹர்பஜன் சிங்குடன் ’பிரண்ட்ஷிப்’ படத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றார். தற்போது பிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே ஹீரோயின் லுக் வரவேண்டும் என்பதற்காக இரவு பகலாக ஒர்க் அவுட் செய்து உடல் எடையை ஸ்லிம்மாக்கி வருகிறார். 

ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்துவிட்டு வியர்வை வடிய போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அப்படியே ஓவியா போன்றே இருக்கிறார் அம்புட்டு ஸ்லிம் ஆகிட்டாங்க அம்மணி. சூப்பர் லாஸ்...