இணையத்தில் உலா வரும் பிக்பாஸ் போட்டியாளர்கள் பெயர் பட்டியல்
பிக் பாஸ் ஷோவில் சமூக வலைத்தளங்களில் சில போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
சீரியல் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக ஒளிப்பரப்பானது பிக்பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சிக்கு உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 4 சீசன்களும் மக்களிடம் நல்லவரவேற்பைப் பெற்றதுபோல் அடுத்ததாக ஒளிபரப்பாகவுள்ள சீசன் 5 பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
இதில், பிக்பாஸ் சிசன் 5 நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோக்கள் வெளியாகிவரும் நிலையில் போட்டியாளர்களுடன் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிக் பாஸ் ஷோவில் சமூக வலைத்தளங்களில் சில போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அதில், அக்ஷரா ரெட்டி, நடிகை பவானி ரெட்டி, தொகுப்பாளினி பிரியங்கா, ஜாக்குலின், சுனிதா , சந்தோஷ் பிரதாப் , கோபிநாத் ரவி, மிலா உள்ளிட்டோர்களின் பெயர்கள் உள்ளது.