வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (14:03 IST)

மார்க் ஆண்டனி படத்தில் அனுராக் காஷ்யப்… எஸ் ஜே சூர்யாவால் நடந்த மாற்றம்!

விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆனத் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’.  இந்த படத்தை மினி ஸ்டியோஸ் சார்பாக வினோத் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

விஷாலின் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்துவந்ததால் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல்தான் இந்த படம் ரிலீஸானது. ஆனால் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு, ஆதிக்கின் திரைக்கதை மற்றும் ஜி வி பிரகாஷின் கலக்கலான இசை என படம் ரசிகர்களைக் கட்டிப் போட்டது. மேலும் போட்டிக்கு வேறு படங்களும் வராததால் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா அப்பா மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஆனால் முதலில் அவரின் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப்பைதான் நினைத்திருந்தாராம் ஆதிக் ரவிச்சந்திரன். ஆனால் எஸ் ஜே சூர்யாதான் இரண்டு வேடங்களிலும் நானே நடிக்கிறேன் எனக் கூற சில மாற்றங்களை செய்தாராம் ஆதிக்.