1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (07:14 IST)

“உன்னால பெரிய படம் பண்ண முடியும்னு சொன்னாரு..” மார்க் ஆண்டனி பட வெற்றி விழாவில் ஆதிக் நெகிழ்ச்சி!

விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆனத் திரைப்படம் ’மார்க் ஆண்டனி’.  இந்த படத்தை மினி ஸ்டியோஸ் சார்பாக வினோத் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

விஷாலின் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்துவந்ததால் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல்தான் இந்த படம் ரிலீஸானது. ஆனால் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு, ஆதிக்கின் திரைக்கதை மற்றும் ஜி வி பிரகாஷின் கலக்கலான இசை என படம் ரசிகர்களைக் கட்டிப் போட்டது. மேலும் போட்டிக்கு வேறு படங்களும் வராததால் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று நடந்தது. அப்போது கலந்துகொண்டு பேசிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் “இந்த வெற்றியின் போது அஜித் சாரை நினைத்துக் கொள்கிறேன்.  நேர்கொண்ட பார்வை ஷூட்டிங்கில் அவரை சந்தித்த பின்தான் என மனநிலையே மாறியது. ‘உன்னால பெரிய படம் பண்ணமுடியும். போய் பண்ணு’ என எனக்கு நம்பிக்கை அளித்தார்” என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.