ஞாயிறு, 3 டிசம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 23 செப்டம்பர் 2023 (07:04 IST)

லோகேஷ், நெல்சன் &ஹெச் வினோத் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை- ராகவா லாரன்ஸ் கருத்து!

ராகவா லாரன்ஸ, லட்சுமி மேனன், வடிவேலு மற்றும் கங்கனா ரனாவத் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் முடிவடையாததால் படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 28 ஆம் தேதி என்று மாற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து சமீபத்தில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ். அப்போது பேசிய அவர் “லோகேஷ், நெல்சன் மற்றும் ஹெச் வினோத் ஆகியோர் எடுக்கும் படங்கள் சூப்பரா இருக்கு. அவர்கள் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், திரைக்கதைக்கும் ஆக்‌ஷனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நாமளும் அதுக்கேத்த மாதிரி மாறனும்னு தோனுது” எனப் பேசியுள்ளார்.

முனி மற்றும் காஞ்சனா வரிசை படங்களை தொடர்ச்சியாக இயக்கி தன்னை ஒரு கமர்ஷியல் ஹிட் இயக்குனராகவும் நிரூபித்துள்ளார் ராகவா லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.