ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 8 ஜூலை 2021 (16:37 IST)

மகேந்திரனுடன் 11,000 பேர் திமுகவின் இணையவுள்ளனர் !!

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய மகேந்திரன் நாளை திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்றைய மகேந்திரன் வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்வியை தழுவிய நிலையில் மநீம கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்த பலர் கட்சியிலிருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது. மநீம கட்சியின் டாக்டர் மகேந்திரனும் கட்சியிலிருந்து விலகிய நிலையில் அவர் திமுகவில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மகேந்திரன் திமுகவில் இணையவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது அறிக்கையில் மகேந்திரன் கூறியுள்ளதாவது: திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் டாக்டர். ஆர். மகேந்திரன் அவர்கள் இன்று திமுகவில் இணையவுள்ளார். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 78 பேர் கொண்ட முதற்கட்டக் குழுவும்  இந்நிகழ்வில் திமுகவில் இணையவுள்ளனர்.

மேலும், பெருந்தொற்றுக் காலம் என்பதால், சமூக இடைவெளிக் கட்டுப்பாடுகளைக் கருத்திக்கொண்டு 78 பேர்களுடன் இணையவுள்ள மற்ற 11,000 பேர்களின் முழு விவரங்கள் பெயர், தொகுதி, அடையாள அட்டை, முந்தைய கட்சி அடங்கிய ஒரு தொகுப்புப் புத்தகத்தை தலைவர் முக.ஸ்டாலின் அடைவர்களிடம் சமர்ப்பிப்பார்கள் என தெரிவித்துக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.