கலைஞர் நினைவிடத்தில் குவியும் அதிமுகவினர் ..

Jayalalitha
Sinoj| Last Updated: புதன், 27 ஜனவரி 2021 (16:01 IST)

இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் திறக்கப்பட்டது. இதில் பல ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர். அதேசமயம் அங்குள்ள முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நினைவிடத்திலும் அவர்கள் குவிந்துள்ளனர்.

தமிழக முன்னாள் முதல்வரும், தமிழ் சினிமாவில்
முன்னாள் நாயகியாகவும் இருதுறைகளிலும் ஈடுபட்டு வீழ்ச்சியும் எழுச்சியும் கண்ட ஜெயலலிதாவிற்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு திறந்தனர்.

இதில் பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர். அங்குள்ள அறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு அருகில்தான் கருணாநிதியின் நினைவிடமும் உள்ளதால் அதிமுகவினர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவ்விடத்தில் குவிந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, தமிழகத்திற்கு தங்கள் ஆட்சியால் வளர்ச்சி ஏற்படுத்திய எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, கருணாநிதியின் நினைவிடத்தைப் பார்க்க வந்துள்ளோம் எனத் தெரிவித்துள்ள்ளனர் .இதில் மேலும் படிக்கவும் :