1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Modified: புதன், 13 ஆகஸ்ட் 2014 (17:39 IST)

விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஹீரோயின் கீர்த்தி சுரேஷ்

விஜய்யின் அடுத்தப் படத்தில் விக்ரம் பிரபு நடிக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிப்பவர் கீர்த்தி சுரேஷ்.
கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் பிரபலம். சமீபத்தில் வெளியாகி ஹிட்டான திலீபின் ரிங் மாஸ்டர் படத்தில் கண் தெரியாதவராக நடித்திருந்தார். இவர் நெற்றிக்கண் உள்பட பல பழைய படங்களில் நடித்த மேனகாவின் மகள்.
 
சைவம் படத்துக்குப் பிறகு விஜய் இயக்கும் படம் இது. காதல் கதை என கூறப்படுகிறது. செப்டம்பரில் ஆரம்பிக்கப்பட உள்ள இந்தப் படத்தின் போட்டோஷுட் இன்று நடக்கிறது.