ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Updated : வெள்ளி, 16 ஜூலை 2021 (16:46 IST)

சர்தார் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடக்கம்!

கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் கட்டுப்பாடுகளுடன் தொடங்க உள்ளது.

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவராகிய கார்த்தி நடித்த சுல்தான் சமீபத்தில் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. கார்த்தியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த டைட்டில் மோஷன் போஸ்டரில் இருந்து அவருடைய அடுத்த படத்துக்கு ’சர்தார்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் சில நாட்கள் நடந்த நிலையில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடுமையான கட்டுப்பாடுகளோடு மீண்டும் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.