போலி சமூக வலைதள கணக்கு...சிவகார்த்திகேயன் பட இயக்குநர் எச்சரிக்கை
நடிகர், நடிகைகள், பிரபலங்களின் பெயரில் சமூக வலைதளங்களில் மோசடி நடைபெற்று வரும் நிலையில் சிவகார்த்திகேயன் பட இயக்குநர் எச்சரித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் பிரபலங்கள், எழுத்தாளர்களின் பெயர்களில் போலி அக்கவுண்ட் தொடங்கி பணம் கேட்டு மோசடியில் ஈடுபடும் செயல் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து நடிகர், நடிகைகள் எச்சரித்துள்ள நிலையில், தற்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ரஜினிமுருகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் தனது பெயரில் ஃபேஸ்புக்கில் போலில் அக்கவுண்ட் உருவாக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து வரும் அழைப்புகளை ஏற்காதீர்கள் என எச்சரித்துள்ளார்.