புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 ஏப்ரல் 2019 (16:43 IST)

தயாராகிறது எம்.ஆர்.ராதா பயோபிக் – முக்கிய வேடத்தில் சிம்பு, அரவிந்த்சாமி !

தமிழின் பழம்பெரும் நடிகரரான எம்.ஆர். ராதாவின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் சிம்பு எம்.ஆர்.ராதாவாகவும், அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர். ஆகவும் நடிக்க இருப்பதாக செய்திகள் உலாவர ஆரம்பித்துள்ளன.

கோலிவுட்டில் பேய் படங்களின் ட்ரண்ட்டை அடுத்து இப்போது பயோபிக் படங்களின் ட்ரண்ட் ஆட்டிப் படைக்க ஆரம்பித்துள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இரண்டு பேர் படமாகவும் ஒரு வெப் சீரிஸாகவும் எடுத்து வருகின்றனர். இதனால் அதிகளவில் பயோபிக் படங்கள் உருவாக ஆரம்பித்துள்ளன.

அந்த வரிசையில் பழம்பெரும் நடிகரான எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை வரலாற்றை அவரது மகளான ராதிகா சரத்குமார் தயாரிக்க இருக்கிறார்.. இந்த படத்தில் எம்.ஆர்.ராதாவாக நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை எம்.ஆர்.ராதாவின் பேரனான ஐகி இயக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே சங்கிலி புங்கிலி கதவ தொற எனும் படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்க அரவிந்த்சாமியிடமும் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகக் கூறப்படுகிறது.