1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 24 ஏப்ரல் 2019 (15:04 IST)

விபத்து நேரிட்டவரை மருத்துவமனைக்கு சென்று பார்த்த விஜய்! வீடியோ இதோ!

"தளபதி 63" படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த எலக்ட்ரீஷியனை மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளார் விஜய்.


 
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு ஈவிபி ஃபிலிம் சிட்டியில் படுமும்முரமாக நடந்து வருகிறது. 
 
இப்படத்தின் படப்பிடிப்பில் ஒரு முக்கிய காட்சிக்காக 100 அடிக்கு மேல் வைக்கப்பட்டிருந்த ஃபோக்கஸ் லைட் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் எலக்ட்ரீஷியன் செல்வராஜ் படுகாயம் அடைந்தார். பின் அவர் உடனடியாக அருகில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தால் படப்பிடிப்பில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்நிலையில் தற்போது,  நடிகர் விஜய் ராமசந்திரா மருத்துவமனைக்கு சென்று செல்வராஜை பார்த்துள்ளார். அவர் மருத்துவமனைக்கு சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் விஜய் மருத்துவமனைக்கு சென்றதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.