வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 10 ஆகஸ்ட் 2022 (19:56 IST)

அமீர்கான் படத்திற்கு விளம்பரம் செய்த நாக சைதன்யா

இந்தி சினிமாவில் தங்கல், தாரே ஜாமின் தார், தூம்-3 உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்தவர் நடிகர் அமீர்கான். இவர் நடிப்பில், அத்விடத் சாண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லால்சிங் சத்தா. இப்படத்தில் அமீருக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்துள்ளார். ஷாருக்கான் கவுரவ வேடத்தில்  நடித்துள்ளார்.

ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இப்படம் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் புரமோஷன் பணிகளில் நடிகர் அமீர்கான் ஈடுபட்டுள்ளார்.  இப்படதிதின் படத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில், நடிகர் உதய நிதி, நாக சைதன்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.

 அப்போது,  நாக சைதன்யா கூறியதாவது: நானும் 'லால் சிங் சத்தா'  படதிதில் நடித்துள்ளேன். அதனால் இப்படத்தின் புரமோஷனில் கலந்துகொள்வதில் மகிழ்கிறேன்.  இப்படம் என் சினிமா கேரியலில் முக்கியமான படமாக அமைந்துள்ளது. இப்படத்தில் நடிக்கும்போது, நிறைய விசயங்களைக் கற்றுக் கொண்டேன். அதற்காக அமீர்கான் மற்றும் தயாரிப்பாளருக்கு  நன்றி கூறிக் கொள்கிறேன்.  வரும் ஆகஸ்ட் 11 ல் ரிலீஸாகும் இப்படத்திற்கு உங்கள் ஆதரவு வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.