1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

சுலபமான ஓட்ஸ் லட்டு செய்ய விருப்பமா....

தேவையான பொருட்கள்:
 
ஓட்ஸ் - அரைக்கிலோ
துருவிய தேங்காய் - 2 கப்
சர்க்கரை - ஒரு கப்
ஏலக்காய் - 8
முந்திரி - 100 கிராம்
கிஸ்மிஸ் - 50 கிராம்
பேரீச்சை - 100-150 கிராம்
நெய் - 200 மி


 
செய்முறை:
 
ஓட்ஸ், தேங்காய் தனி தனியாக லேசாக பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்று சேர்க்கவும்.  முந்திரி கிஸ்மிஸ் வறுத்து சேர்க்கவும். அத்துடன் கொட்டை நீக்கிய பேரீச்சை சேர்க்கவும். ஒரு சேர பிரட்டி கலந்து ஆற  வைக்கவும்.
 
ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து எடுக்கவும்.இப்படியே முழுவதையும் போட்டு பொடித்து ஒரு பாத்திரத்தில்  வைக்கவும். சர்க்கரையுடன் ஏலக்காய் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
 
ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். கொதித்த சர்க்கரை பாகில் பொடித்த ஓட்ஸ், நட்ஸ், டேட்ஸ் மிக்ஸ் சேர்க்கவும். பிரட்டி விட்டு நெய் சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாக பிடிக்கவும். ஓட்ஸ் லட்டு தயார். மணமாகவும், சுவை சூப்பராகவும் இருக்கும்.