1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala
Last Updated : வியாழன், 24 மார்ச் 2016 (11:20 IST)

திருமணங்களில் பிரசித்தி பெற்ற காசி அல்வா

திருமணங்களில் பிரசித்தி பெற்ற காசி அல்வா

தேவையான பொருட்கள்:
 
பூசணிக்காய் - 2 கிலோ
தண்ணீர் - 4 டம்ளர்
நெய் - 300 கிராம்
திராட்சை, முந்திரி, ஏலப்பொடி - தேவையான அளவு
ஜாதிக்காய் பொடி - சிறிதளவு
சர்க்கரை - 11/2 கிலோ


 
 
செய்முறை:
 
பூசணிக்காயைத் துருவி, 4 டம்ளர் நீர் சேர்த்து வேகவைத்து வெள்ளைத் துணியில் வடிகட்டி பிழிந்தெடுக்க வேண்டும்.

11/2 கிலோ சர்ககரை சேர்த்து அடுப்பில் ஏற்றி வேக வைக்க வேண்டும். சர்க்கரை பாகாக உருகி, மொத்தமாக இறுகி வரும் வேளையில் வாணலியில், நெய் வைத்து முந்திரி, திராட்சை, பாதாம் வறுத்து, அல்வாவில் போட்டு கிளறி கடைசியாக ஏலப்பொடி சேர்த்து, ஜாதிக்காய்ப் பொடி போட விரும்பினால் போட்டு கடைசியாக கேசரி பவுடர் சேர்க்கலாம். கலர் சேர்ககாவிட்டாலும் அது இயற்கையான தேன் நிறத்தோடு நன்றாக இருக்கும்.