திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By

அட்டகாசமான சுவையில் ரச மலாய் செய்ய..!!

தேவையான பொருட்கள்:
 
பால் - 1 1/2 லிட்டர்
எலுமிச்சை சாறு - 2 1/2 டேபுள் ஸ்பூன்
ரவை - 1 டேபுள் ஸ்பூன்
தண்ணீர் - 1 லிட்டர்
சர்க்கரை - 200 கிராம்
 
பாதாம் பால் செய்ய:
 
பால் - 1 1/2 லிட்டர்
சர்க்கரை - 200 கிராம்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
குங்குமப் பூ - ஒரு சிட்டிகை
பிஸ்தா - சிறிதளவு
செய்முறை :
 
பாத்திரத்தில் தண்ணீர் இல்லாமல் பால் ஊற்றி கொதிக்கவிடவும். அதில் எலுமிச்சை சாறு ஊற்றி கிளறினால் பால் திரிந்து வரும். இதனை இறக்கி, இறுக்கி திரிந்த பால் கட்டியை தனியாக எடுத்துக்கொள்ளவும்.
 
அதில் ரவை சேர்த்து மாவு போல் தண்ணீர் இல்லாமல் பிசைந்துகொள்ளவும். அதைத் தட்டை வடிவில் தட்டி தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, தட்டி வைத்துள்ள திரிந்த பால் கட்டிகளை சேர்த்து 8 நிமிடங்கள் கொதிக்கவிடவும். மற்றொரு  பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து சர்க்கரை, குங்குமப் பூ, ஏலக்காய் பொடி சேர்த்து கெட்டியாகும் வரைக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்து இறகியதும் ஆற விடவும் அதில் வெப்பம் தனிந்ததும், தனியாக வைத்துள்ள திரிந்த பால் கட்டிகளைச்சேர்க்கவும்.
 
அதை ஃப்ரிஜ்ஜில் வைத்து குளிர்ச்சியானதும் வெளியே எடுத்து பிஸ்தாவை உடைத்து அதன் மேல் தூவவும். சுவையான ரச மலாய் தயார்.