திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கோயிலுக்கு செல்லும் முன் அசைவம் தவிர்ப்பது ஏன் தெரியுமா...?

ஆலயத்துக்கு செல்லும் போது நீராடி, தூய ஆடை அணிந்து செல்ல வேண்டும். அசைவ உணடுகளை தவிர்க்க வேண்டும் என்ற வரையறைகள் உண்டு. நாம் உண்ணும் உணவு நம் உடலில் பல மாற்றங்களை உண்டாக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். 
நாம் சாப்பிடும் உணவின் அடிப்படையிலேயே நமது உடல் செயல்படுகிறது. உதாரணமாக பொங்கல், தயிர் போன்ற உணவுகளை சாப்பிடுவதால் உடல் மந்த நிலையை அடைவதும் காரம் அதிகமாக சாப்பிட்டால் கோவம் அதிகமாக வருவதையும் நம்மால் உணர முடியும்.
 
பொதுவாக அசைவ உணவு நம் உடலால் ஜீரணமாக 12 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஜீரணமாகாத உணவு உடலளவில் அதிக மந்தநிலையை ஏற்படுத்தும். 
கோயிலுக்கு செல்லும் போது சுத்தமாக செல்ல வேண்டும். சுத்தம் என்பது உடலை மட்டும் குறிப்பதல்ல மனதையும் சேர்த்து தான் குறிக்கிறது. மனதளவில் மந்த நிலையில் உள்ள ஒரு நபர் கோயிலுக்கு செல்லும் போது கோயிலுக்குள் இருக்கும் சூட்சும சக்தியை பெறக்கூடிய ஆற்றலை இழந்து விடுகிறார். அசைவ உணவானது சூட்சும சக்தி பெறும் ஆற்றலை குறைத்து விடுகிறது. 
இதனால் தான் கோயிலுக்கு செல்லும் போது எளிமையான உணவை உண்டு மனதளவில் உற்சாகத்துடன் இறைவனை தரிசிக்க வேண்டும் என்பார்கள் நம் முன்னோர்கள். ஒருவேளை அசைவ உணவு சாப்பிட்ட பின் கோயிலுக்கு போக கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் 3 அல்லது 4 மணி நேரத்திற்கு பின்னரே கோயிலுக்கு செல்ல வேண்டும். மேலும் குளித்துவிட்டு சென்றால் கோயிலில் நிலவும் சூட்சும அதிர்வுகளை  உணரமுடியும்.