1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala
Last Updated : புதன், 8 டிசம்பர் 2021 (13:46 IST)

சுவை மிகுந்த பலாப்பழ பாயாசம் செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
பலாப்பழ சுளைகள்  - தேவையான அளவு
தேங்காய் பால் - 2 கப்
வெல்லம் - 1 கப் (பொடித்தது )
ஏலக்காய் தூள் - சிறிதளவு
நெய் - சிறிதளவு
தண்ணீர் - தேவையான அளவு
முந்திரி, திராட்சை - சிறிதளவு

செய்முறை:
 
முதலில் பலாப் பழத்தின் சுளைகளை நன்கு பொடிப்பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் கொஞ்சம் நெய் சேர்த்துக் கொள்ளவும்.
 
நெய் சூடானதும் அதில் நறுக்கி வைத்துள்ள பலாப்பழ துண்டுகளை சேர்க்கவும். 2 நிமிடத்திற்கு பலாப்பழத்தை நன்கு வதக்கிக் கொள்ளவும். ஓரளவிற்கு பலாப்பழம் வதங்கியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
 
பலாப்பழம் வெந்ததும் எடுத்து வைத்துள்ள தேங்காய் 2 கப் தேங்காய் பாலை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். பின்னர் பொடி செய்து வைத்துள்ள வெல்லத்தை சேர்க்கவும்.
 
வெல்லம் நன்கு கரைந்து சிறிது நேரம் கொதித்து கெட்டியான பதத்திற்கு வந்த பின் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து அடுப்பில் இறக்கி விடவும். பின்னர் ஒரு சிறிய வாணலியில் கொஞ்சம் நெய் சேர்த்து முந்திரி, திராட்சை வறுத்து எடுத்து கொள்ளவும். வறுத்த முந்திரி திராட்சையை பாயாசத்தில் சேர்த்து பரிமாறினால் சுவையான பலாப்பழ பாயாசம் தயார்.