சுவையான இளநீர் பாயாசம் செய்ய !!

Elaneer payasam
Sasikala|
தேவையான பொருட்கள்:
 
இளநீர் -  1 கப்
இளநீர் வழுக்கை  - 1 கப்
கன்டன்ஸ்ட் மில்க் - அரை கப்
பால்  -   2 கப்
சர்க்கரை -   அரை கப்
ஏலக்காய் தூள்  -  அரை தேக்கரண்டி
நட்ஸ் -  கால் கப் (நறுக்கியது)

செய்முறை:
 
* பாதியளவு இளநீர் வழுக்கையில் சிறிது இளநீர் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள இளநீர் வழுக்கையை பொடியாக நறுக்கி வைக்கவும்.
 
* அடிகனமான பாத்திரத்தில் கன்டன்ஸ்ட் மில்க் ஊற்றி அதில் சர்க்கரை, பால் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்கவும். பால் பாதியாக குறையும் வரை சிம்மில் வைத்து கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
 
பால் பாதியாக சுண்டியதும் தீயை அணைத்து விட்டு அரைத்த இளநீர் விழுதை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு மீதமுள்ள நறுக்கிய இளநீர் வழுக்கை, இளநீர், ஏலக்காய் தூள், நறுக்கிய நட்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு பிரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து பரிமாறவும். சுவையான இளநீர் பாயாசம் தயார்.


இதில் மேலும் படிக்கவும் :