புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 14 அக்டோபர் 2019 (20:46 IST)

ஆரோக்கியமான நம்ம ஊர் கருப்பட்டி இனிப்புகள்; தீபாவளிக்கு ருசிக்க ஒரு வாய்ப்பு

கருப்பட்டி தமிழர்கள் உலகிற்கு அளித்த கொடை.  பூக்கள் பூக்க தாவரங்கள் செலுத்தும் திரவத்தில் உள்ள sucrose நமது உடலுக்குத் தேவையான இனிப்பினை வழங்க வாய்ப்பிருப்பதை அறிந்ததுதான் தமிழர்களின் நாகரிக பாய்ச்சலில் முக்கிய புள்ளி.  இவ்வகை இனிப்புகளில் முதன்மையாக தமிழர்கள் பயன்படுத்தியது பனை மர இனிப்பூட்டியான பனங் கருப்பட்டியினை. 
 

குறிப்பிட்ட 25 ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கூட கருப்பட்டி நமது வீட்டின் அன்றாட பயன்பாட்டில் இருந்தது ஆனால் இன்று நமது தலைமுறையில் கருப்பட்டியினை அறியாதவர்கள் அதிகம் என்று கூறும் அளவிற்கு மாறிவிட்டது.
 

1) தினசரி நெல்லிக்காய் அளவு கருப்பட்டி உடம்பில் சேர்த்து வந்தால் வயிற்றில் உள்ள கசடுகள் நீங்கி சுத்தமாக இருக்கும்.  இதனை அறிந்தே பிறந்த குழந்தைக்கு கருப்பட்டி தண்ணீர் கொடுத்து வயிற்றில் உள்ள கழிவுகளை நீக்குவதை வழக்கமாக்கி இருந்தனர்.  இன்று வழக்கம் அப்படியே இருக்கிறது ஆனால் நாம் கருப்பட்டி தண்ணீர் என்று பெயர் சொல்லி வெள்ளை சர்க்கரை தண்ணீர் கொடுக்கும் அர்த்தமற்ற வேலையைச் செய்து வருகிறோம்

2) அதீத கால்சியம் கொண்ட கருப்பட்டி எலும்புகளை வலுவாக்கி வயதான காலத்திலும் எலும்பின் அடர்த்தி குறையாமல் பார்த்துக்கொள்ளும்.  இதனை அறிந்தே சண்டையில் கால் முறியும் கட்டு சேவல்களுக்கு கருப்பட்டி தண்ணீர் தரும் வழக்கத்தைக் கொண்டிருந்தோம். 
 

இப்படி பல அற்புத நலன்களைக் கொண்ட கருப்பட்டியின் பலன்களை உணர்ந்து இனி முடிந்த வரை வெள்ளை சர்கரையினை தவிர்க்க எண்ணுவோம். 

இத்தகைய ஒரு எண்ணத்தினை முத்தாய்ப்பாகக் கொண்டு நேட்டிவ்ஸ்பெஷல் இணையம் இந்த தீபாவளிக்கு பெண் பனைக் கருப்பட்டியில் செய்த இனிப்புகளை சிறந்த முறையில் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும்
முயற்சியினை மேற்கொண்டு வருகிறது.
 

கருப்பட்டி மைசூர்பாக், கருப்பட்டி முந்திரி கேக், கருப்பட்டி ஹல்வா, கருப்பட்டி பிஸ்தா ரோல், என கருப்பட்டியில் அனைத்து இனிப்புகளையும் மிகச் சிறந்த ருசியில் நமது வீட்டிற்கே கொண்டு வந்து சேர்க்கிறார்கள். 
 

இந்த தீபாவளிக்கு உடல் நலன் தரவல்ல ஆரோகியமான நம்ம ஊர் கருப்பட்டி இனிப்புகளை நேட்டிவ்ஸ்பெஷல் (nativespecial.com) இணையத்தில் ஆர்டர் செய்து ருசித்து மகிழ்வோம்.