மாமி முறுக்கு முதல் மணல்மேடு முறுக்கு வரை: மனம் குளிரும் மண் சார்ந்த தின்பண்டங்கள்!

மாமி முறுக்கு முதல் மணல்மேடு முறுக்கு வரை: மனம் குளிரும் மண் சார்ந்த தின்பண்டங்கள்!


Caston| Last Modified திங்கள், 29 மே 2017 (13:05 IST)
கடந்த 2014-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் காக்கா முட்டை. இந்த படத்தின் கதை பீட்சா என்ற உணவுப்பொருளை மையமாக வைத்து நடைபெறும். பிரபல நடிகரை வைத்து விளம்பரம் செய்ததால், பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருப்பதால் அந்த பீட்சா உண்பதற்கு சிறப்பாக இருக்கும் என இரண்டு சிறுவர்கள் நினைத்து அதனை வாங்கி உண்ண சிறிது சிறிதாக பணம் சேர்பார்கள்.

 
 
அதன் பின்னர் அந்த பீட்சா கடைக்குள் செல்ல வேண்டுமானால் புதிய ஆடை அணிந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரும் சிறுவர்கள் அதற்கான முயற்சியில் இறங்குவார்கள். இறுதியில் பல தடங்கள், பிரச்சனைகளுக்கு பின்னர் பீட்சாவை உண்பார்கள் சிறுவர்கள்.
 
பீட்சாவை உண்ணும் அந்த சிறுவர்களில் ஒருவன் சொல்லுவான் என்னடா இந்த பீட்சா இப்படி இருக்கு, அதுக்கு பாட்டி சுட்ட தோசையே நல்லா இருக்குமே என்பான். இன்றைய காலகட்டதில் நாம்மில் பலரும் இந்த மனநிலமையில் தான் இருக்கிறோம் நம் மண் சார்ந்த பல தின்பண்டங்களை மறந்துவிட்டு நாகரிகம் என்ற பெயரில் என்ன சாப்பிடுகிறோம் அது எப்படி தயாரிக்கப்படுகிறது, அதில் என்ன மூலப்பொருட்கள் இருக்கிறது என்பது தெரியாமலே அதற்கு அடிமை ஆகின்றனர்.


 
 
மேலைநாட்டால் புகுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் மீது மோகம் இருந்தாலும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தனது மண் சார்ந்த உணவுப்பொருட்கள் பார்க்கும் போது நாக்கில் எச்சில் ஊறத்தான் செய்யும். இந்த காலத்தில் அந்த உணவுப்பொருட்கள் எங்கே கிடைக்கப்போகிறது என கடந்து சென்றுவிடுகிறோம்.
 
ஆனால் நமது மண் சார்ந்த கிராமத்து தின்பண்டங்களை இணையதளம் மூலம் உலகம் முழுவதும் விற்பனை செய்யும் சவாலான பணியை இரண்டு இளைஞர்கள் வெற்றிகரமாக செய்து வருகின்றனர். நேட்டிவ் ஸ்பெஷல் (NativeSpecial.com) என்ற இணையதளம் மூலம் மண்ணின் மணம் பார் முழுவதும் பரவ முயன்று வருகின்றனர் இந்த இளைஞர்கள்.
 
இவர்கள் தங்களின் நேட்டிவ் ஸ்பெஷல் (NativeSpecial.com) என்ற இந்த இணையதளம் மூலம் இந்த சேவையை இந்தியா மட்டுமில்லாமல் அமெரிக்கா, ஐரோப்பா, லண்டன், கனடா என பல நாடுகளுக்கு ஐந்தே நாட்களில் அளிக்கிறார்கள். இதில் நீங்கள், திருநெல்வேலி அல்வா, திருநெல்வேலிநெய் அல்வா, சாத்தூர் சேவா, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்க்கோவா, திருநெல்வேலி கருப்பட்டி அல்வா, கொம்பு தேன், சிந்தலவாடி காரமிக்சர், வெள்ளியனை அதிரசம், புதுபாளையம் ராகி முறுக்கு, மாமி முறுக்கு, ஊத்துக்குளி நெய் பிஸ்கெட், முதலூர் மஸ்கோத் அல்வா, செட்டிநாடு தேன்குழல் முறுக்கு, மண்பாணை கருப்பட்டி பால்கோவா, மணல்மேடு முறுக்கு உள்ளிட்ட மேலும் பல தின்பண்டங்கள் இங்கு விற்கப்படுகிறது. ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடி வந்து உங்கள் சந்தோசத்தை தருவார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :