1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
  4. In superb taste make Pineapple Kesari...!

சூப்பரான சுவையில் அன்னாசிப்பழ கேசரி செய்ய !!

அன்னாசிப் பழ கேசரி
தேவையான பொருட்கள்:
 
ரவா - 1 கப் (வறுத்தது)
சர்க்கரை - 3/4 கப்
அன்னாசிப்பழம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
முந்திரி பருப்பு - 6
உலர் திராட்சை - 7
தண்ணீர் - 3 கப்
நெய் - 3 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - தேவையான அளவு
 
 
செய்முறை:
 
முதலில் ரவையை சிறிது நெய் விட்டு லேசாக வறுத்துக்கொள்ளவும். அதே கடாயில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு முந்திரி, திராட்சை பொரித்து தனியாக  வைத்துக்கொள்ளவும்.
 
அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடிப்பில் வைத்து கொதி வந்தவுடன் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ரவாவை லேசாக தூவிகொண்டே  கிளறிவிடவும் (கட்டிபடாமல்). ஓரளவு ரவை வெந்து வந்தவுடன் சர்க்கரையை கொட்டி கிளறவும்.

பின் அதனுடன் நறுக்கிய அன்னாசிப்  பழத்தை சேர்த்து கிளறிவிடவும். நன்றாக வெந்தவுடன் (சிறிதுநேரத்தில்) இரண்டு ஸ்பூன் நெய் விட்டு கிளறவும்.
 
பின்னர் தனியாக வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை,  ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து விடவும். அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு சுவையான அன்னாசிப் பழ  கேசரி தயார்.
About Writer
Sasikala